நேபாளத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் பத்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு முன்பு, அந்த நிலத்தில் உள்ள வாழை மரத்தின் கீழ் நேரடி வெடிகுண்டு மற்றும் தோட்டாக்களை புதைத்து வைத்திருந்தம்மை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை குற்ற பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
