ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக திருகோணமலைக்கு வருகைதந்திருந்த நிலையிலேயே நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக 32 ஆவது நாளாகவும் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முத்து நகர் விவசாயிகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது விவசாய நிலங்களுக்கான தீர்வை முன்வைக்க கோரி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் போராட்ட முண்ணனி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
