இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் இன்று ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
இன்று காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,800 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்றைய விலை 379,200 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை, நேற்று 410,000 ரூபாவாக இருந்த ’24 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 390,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை விற்பனையாளர்கள் தேரடிவித்துள்ளனர்
