யாழ் சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ரயில், சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் குறித்த பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பெண் இருந்த பெட்டியின் வாசலின் ஊடாக இறங்குவதற்கு இடம் இல்லாத காரணத்தால் வேறு பாதை ஊடாகச் சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்
குறித்த பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


