Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள்

டிசம்பர் 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் அண்மையில் பாரிய உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்திச் சென்ற புயலினால் மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள போதும் இதுவரை யாரும் தம்மை வந்து பார்த்து தமக்கு எவ்வித உதவிகளும் வழங்க முன்வரவில்லை என மன்னார் பனங்கட்டு கொட்டு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாதிப்புகளை எதிர் கொண்டுள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள்,யாரும் வந்து தம்மை பார்த்து பாதிப்புகள் தொடர்பாக கேட்கவில்லை என்றும் எந்த ஒரு நிவாரணங்களும் தரவில்லை என்றும் புயலின் பின்னர் நாங்கள் அரசால் கைவிடப்பட்டுள்ளது போல் உணர்கிறோம் என குறித்த மீனவர்கள் தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு சென்றால் மட்டுமே எங்களுக்கு சாப்பாடு. இனி ஒரு மாசத்துக்கு கடலில் தொழிலுக்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.

எந்த அரச நிறுவனம்,அமைச்சர்கள், ஆளுநர், அதிகாரிகள் எம்மை வந்து சந்திக்கவும் இல்லை. எங்களுடைய குறைகளை கேட்கவும் இல்லை அன்றாட உணவுக்கு பெரும் சிரமப்படும் நிலையில் எமது மீனவர்கள் இருக்கிறார்கள்.

கடந்த புயல் வெள்ளத்தின் போது எமது படகுகளை கொண்டு சென்று எத்தனை நபர்களை காப்பாற்றிய எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இல்லை.

மழை நீரில் அடித்து வரப்பட்ட ஆடு ,மாடு விலங்குகள் மனித உடல்கள் போன்ற கழிவுகள் எல்லாம் எமது கடல் பகுதியில் நிறைந்து காணப்படுகிறது.

அதனால் எமது மீனவர்கள் தொழிலுக்கு போவதில்லை .இவ்வாறு சென்றாலும் மீன் கிடைப்பதில்லை .கடல் முழுவதும் சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. எமது படகுகள், வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மீனவ மக்களுக்கு எங்களது சங்கத்தின் மூலம் நாங்கள் கடன் எடுத்துக் கொடுத்திருக்கின்றோம். அவர்களுக்குரிய தொழில் எல்லாம் இந்த புயலால் நிர்மூலம் ஆகியுள்ளது. ஆகவே அந்த கடனை அவர்கள் எவ்வாறு கட்டப் போகிறார்கள் .அவர்களது குடும்பத்திற்கு ஒவ்வொரு நாளும் எவ்வாறு உணவு கொடுக்கப் போகிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புயல் வெள்ளத்தில் இறந்தவர்களை விட மன்னாரில் மீனவ மக்கள் பட்டினியால் சாகப் போகிறார்கள். அப்படி ஒரு நிலைமைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே அரசாங்கம் இதை கருத்தில் கொண்டு எமது மக்களுக்கு நிவாரணத்தை விரைவாக கொடுக்க வேண்டும் .கடல் தொழில் அமைச்சர், அரச அதிகாரிகளோ மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எம்மை வந்து சந்தித்து எமது மீனவர்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என குறித்த மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முந்தைய செய்தி வடக்கிலுள்ள கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல் விடுப்பு
அடுத்த செய்தி யாழில் வெள்ள நிவாரணத்தில் ஊழல் இல்லை – ம.பிரதீபன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

30 ஆண்டுகளாக சிறையில் வாடும் அண்ணாவை விடுவியுங்கள் – வாகினி

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திலீபன் நினைவு ஊர்தி வவுனியாவில் இருந்து புறப்பட்டது!

செப்டம்பர் 20, 2025
இலங்கை

உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் அதிகரிப்புக்கு ஏந்தவித நடவடிக்கையும் இல்லை – நா.வர்ணகுலசிங்கம்!

செப்டம்பர் 5, 2025
இலங்கை

துறைமுகத்தில் 1000 கொள்கலன்கள் தேங்கியுள்ளது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?