மொண்ட்ரியல் நகரத்தின் பொதுப் போக்குவரத்தை இயக்கும் 4,500 பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் மெட்ரோ ரயில் இயக்குநர்கள் அடங்கிய தொழிற்சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால், மொண்ட்ரியல் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
எஸ்.டி.எம். என்று அழைக்கப்படும் Société de transport de Montréal அமைப்பின் நிர்வாகத்தினரின் “பிடிவாதப்” போக்கே இந்த வேலைநிறுத்தத்திற்குப் பிரதான காரணம் என்று, தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த ஆண்டின் துவக்கத்தில் எஸ்.டி.எம்-இன் பராமரிப்புத் தொழிலாளர்கள் இரண்டு முறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது இந்த புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
