மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 2030 கிராம் ஜஸ் போதை பொருளுடன் 24,23 வயதுடைய இளம் தம்பதிகள் ஆகிய இருவரை நேற்று திங்கட்கிழமை (6) மாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலாக பொலிசார் கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய தொகையிலான ஜஸ் போதை பொருள் இப்போது முதல் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்சக் கரியாலயத்துக்க அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கல்குடாவில் இருந்து ஜஸ் போதை பொருளை முச்சக்கர வண்டியில் எடுத்தக் கொண்டு சென்ற போது அவர்களை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2030 கிராம் ஜஸ் போதை பொருளை கைப்பற்றியதையடுத்த வெர்களை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டனர்.
மொறக்கொட்டான் சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதை பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்து கொண்டுவந்து தருமாறும் அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபா பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியியுள்ளார்.
இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு புகையிரதத்தில் சென்று அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள்பேருந்து ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து சம்பவதினமான நேற்று மாலை மொறக்கொட்டாஞ் சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கி கொண்டுவந்த நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது பொலிசார் கைது செய்துள்ளதாகவும், தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் இதில் போதை பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இளம் தம்பதிகளை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
