மொன்றியலில் வீடுகளின் பற்றாக்குறை நீங்கி, புதிய குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பட்டாலும், எங்கு கட்டுவது என்பது தொடர்பில் உள்ளூர் மக்களுக்கும், மாநகர நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் இதுவே முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
குடியிருப்புத் தேவை தீவிரமடைந்துள்ள நிலையில், கைவிடப்பட்ட நிலங்கள், கடற்கரை ஓரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என, முன்னர் ‘பயன்படுத்த முடியாததாக’ கருதப்பட்ட இடங்களிலும் தற்போது கட்டுமான முன்மொழிவுகள் எழுகின்றன.
ஆனால், இவை உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன.
Pointe-Claire புறநகர்ப் பகுதியில், Fairview Mall-க்கு மேற்கே உள்ள 16 ஹெக்டேர் வனப்பகுதியை அழித்து வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
