ஆசியக் கிண்ண டி20 தொடரில் சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற அசத்தல் சாதனையை பெத்தும் நிசங்க தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் அவர் குறித்த சாதனையை தனதாக்கினார்.
இதன்படி 58 பந்துகளை சந்தித்த பெத்தும் நிஸ்ஸங்க 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 107 ஓட்டங்களைக் குவித்தார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய 4ஆவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் சார்பில் 2010ஆம் ஆண்டு மஹேல ஜெயவர்தனவும், 2011ஆம் ஆண்டு திலகரத்ன டில்ஷனும், 2025 ஆம் ஆண்டு குசல் பெரேராவும் சதம் விளாசியிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த பட்டியலில் தற்போது பெத்தும் நிசங்க 4ஆவது வீரராக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

