“கனடா ஒரு தலைமுறைக்கான முதலீட்டுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று, சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தில் நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்-ஃபிலிப் சாம்பெயின், தெரிவித்துள்ளார்.
கனடா, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக இந்த அதிக செலவுள்ள வரவுசெலவுத்திட்டம் அவசியம் என்று, அவர் கூறியுள்ளார்.
இந்த வரவுசெலவுத்திட்டம் நவம்பர் மாத தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதேசமயம், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, வரவுசெலவுத்திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை முழு வரவுசெலவுத்திட்ட ஆவணத்தையும் பார்வையிட்ட பின்னரே முடிவு செய்யும் என்று கூறியுள்ளது.


