Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து!

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன் தலைமையிலான உயர்ஸ்தானிகராலய குழு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் டேவிற் பைன், சட்டவிரோத புலம்பெயர்வுக் கட்டுப்பாட்டுக்கான தொடர்பு அதிகாரி ப்ரெட் சீஃல்ட்ட் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்ஹ ஆகியோரும், பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன், பொருளியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முத்துகிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல் கற்கைத் துறையின் நிகழ்சித்திட்டத் தலைவர் பேராசிரியர் சிவானந்தமூர்த்தி சிவேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்துக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், விவசாயம் மற்றும் கடற்றொழில், விளையாட்டு மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படக்கூடிய கூட்டுச் செயற்றிட்டங்கள் பற்றி இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நியூசிலாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான இணைப்பு நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் முன்மொழிவொன்றைக் கோரிய இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், இது தொடர்பில் இணைந்து பணியாற்றுவதற்கான தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

முந்தைய செய்தி யாழ்.போதனாவின் மகப்பேற்று விடுதி புதிய கட்டடத்தில்…
அடுத்த செய்தி யாழ்.பல்கலைக் கலைப்பீடாதிபதியாக பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜீவன் தொண்டமான் கருத்து!

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் பலி- 5 இராணுவ வீரர்கள் கைது!

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்கப்பல்!

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?