சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் வெலிகம, சல்மல் உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மொல்டோவியன் (Moldovian)பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவர் வைத்திருந்த இரசாயனப் பொருட்கள் எவ்வாறான தேவைக்கு பயன்படுத்தப்படுபவை என தீர்மானிக்கப்படவில்லை.
குறித்த இரசாயன பொருட்கள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
