Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இலங்கை வங்கி ஊழியர்கள் போரட்டம்!

ஆகஸ்ட் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலகி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் –

“கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச் சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்திருந்தது.

குறிப்பாக இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கியின் நிர்வாகமும் இயக்குநர்கள் குழுவும் ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகையை குறைக்கவும், நிதி அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நிதி துணை அமைச்சர்கள் இருவரும் எட்டிய ஒப்பந்தங்களை செயல்படுத்தவும் நிதி அமைச்சகம் இன்னும் நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்கிலேயே இருக்கின்றது.

வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ஒப்புக் கொள்ளப்பட்ட ஊக்கத்தொகையில் நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த நாங்கள் அரசாங்கத்தை வலுயுறுத்துகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க வேண்டியிருந்தது.

ஆனாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது

அந்தவகையில் அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.” எனவும் அவர் தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி அளுத்நுவர, சமனலவெவ, ஹென்யாய பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!
அடுத்த செய்தி செயற்கை நுண்ணறிவு பற்றி இன்று விசேட கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச காடுகள் தின கொண்டாட்டம்..

ஏப்ரல் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுகேகொட பாபியிடம் விசாரணை- தோட்டாக்கள் மீட்பு!

அக்டோபர் 18, 2025
இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மனித மேம்பாட்டு கல்வி செயலமர்வு இன்று!

ஆகஸ்ட் 20, 2025
இலங்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடதயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள்!

ஆகஸ்ட் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?