Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த கோரிக்கை

செப்டம்பர் 21, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தற்போதைய அரசாங்கம் மாகாண சபை முறைமைக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள் எனவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

யாழில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான தமிழரசு கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் சர்வேஸ்வரன், ரெலேவின் உறுப்பினர் சபா குகநாதன் மற்றும் புளொட் கட்சியின் உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மாகாண சபையின் காத்திரமான பங்களிப்பு தொடர்பாகவும், மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் தொடர்பில் கலந்துரையாடி இருந்தோம்.

தமிழர்களுக்கான அரசியல்களமாக மாகாண சபையே உண்டு. சுமார் 08 வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. மாறி மாறி வந்த அரசாகங்கள் நடத்தவில்லை.

தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் மாகாண முறைமைக்கு எதிரானவர்களாக இருந்தவர்கள். இவர்களும் மாகாண சபை தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் உள்ளது.

தேர்தலை மிக விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனதிபதி , அமைச்சர்களின் கருத்துக்கள் பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.

புதிய முறை பழைய முறை என காலம் தாழ்த்தது, பழைய முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்கான தீர்வாக மாகாண சபை இருக்கப்போவதில்லை. ஆனால் எழுத்து வடிவில் உள்ளதாக மாகாண சபை முறைமையே உள்ளது. அதனை பயன்படுத்தி தமிழர்கள் தமக்கான தீர்வை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கும் .

அதனையே கடந்த காலங்களில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு சாக்கு போக்குகளை கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைக்கப்பெற்றது. இந்த மாகாண சபை முறைமையே தமிழ் மக்களுக்கான தீர்வின் ஆரம்ப புள்ளியாக பலரும் ஏற்றுக்கொண்டனர்.

எனவே மற்றைய மாகாணங்கள் தென்னிலங்கைக்கு இது மாகாண சபை தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு அவ்வாறு இல்லை.

மாகாண அதிகாரிகள் தங்கள் இஷ்டத்திற்கும் மத்தியின் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப செயற்படுகின்றனர். இதானல் தமிழ் மக்கள் இருப்பு கேள்விக்குறியாக உள்ளது.

தெற்கில் மாகாண சபை தேர்தல்களை நடாத்தாவிடினும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய எம்.ஏ சுமந்திரன்
அடுத்த செய்தி யாழில் வாகன விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

ஜூன் 7, 2025
இலங்கை

சகல பயணிகளுக்கும் இந்த நாடு பாதுகாப்பானது-புத்திக ஹேவாவசம்!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு

பிப்ரவரி 16, 2026
இலங்கை

சற்று முன் இலங்கைக்கு அருகாமையில் உருவெடுத்த புயல்!

நவம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?