1964ம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் சுமார் 60 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது.
இந்த பணிகளுக்காக 424 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளின் நன்மை கருதி இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் விமானப்படை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புறக்கோட்டை மத்திய பேருந்து பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்காக இந்த பேருந்து நிலையத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
