Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரி குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியவர் – விசேட நீதிமன்றம் அறிவித்தல்!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சென்னையில் உள்ள அமெரிக்க மற்றும் பெங்களூருவில் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு, என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு முகவரத்தின் விசேட நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரி ஒருவருக்கே, எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரகத்தின் விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தர முகவரியைக் கொண்ட அமீர் ஸுபைர் சித்திக் என்ற அதிகாரிக்கே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

அவர் 2009 மற்றும் 2016 க்கு இடையில் கொழும்பில், பாகிஸ்தானுக்கான விசா ஆலோசகராக பணியாற்றினார் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அறிக்கையின்படி, குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் மற்றும் போலி நாணயங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.

இந்தநிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் சென்னை, கியூ பிரிவால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஹைதராபாத் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபரான அமீர் ஸுபைர் சித்திக்கின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் நாசவேலை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா வந்ததாக கூறப்படும் இலங்கையரான சாகிர் ஹுசைன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான பெயரிடப்பட்டிருந்த சாகிர் ஹுசைன் முன்னதாக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டில், அமீர் ஸுபைர் சித்திக்குக்கு எதிராக தேசிய புலனாய்வு முகவரகம் மேலதிக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நபர் தொடர்பில் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

முந்தைய செய்தி மொன்றியல் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தவுள்ளது பிரதமர் மார்க் கார்னியின் அரசு!
அடுத்த செய்தி கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் கால தாமதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பண்டிகை கால எரிபொருள் நெருக்கடியை தவிர்க்கவே QR – யாழில் பிமல் தெரிவிப்பு

மார்ச் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சங்கிலியன் பூங்காவை அழிக்கும் செயற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகம் – சீ.வீ.கே. குற்றச்சாட்டு!

அக்டோபர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தங்காலையில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

நவம்பர் 18, 2025
இலங்கை

உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவினுள் வேண்டாம் – கௌரி பொன்னையா(Video)

டிசம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?