சீனாவில் நடைபெறும் காவல்துறை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பதில் காவல்துறை மாஅதிபராக சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மாஅதிபர் லலித் பத்திநாயக்க, மத்திய மாகாணம் மற்றும் காவல்துறை நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வருகின்றார்.
லலித் பத்திநாயக்க முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் பதில் காவல்துறை மாஅதிபராக பணியாற்றியுள்ளார்.
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பிரியந்த வீரசூரிய உரை நிகழ்த்த உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் அவர் எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்பவுள்ளார்.
இலங்கை காவல்துறைக்கு சீனா பல பயிற்சிகளை வழங்கியுள்ளது.
அதன்படி, பல காவல்துறை அதிகாரிகள் குழுக்கள் ஏற்கனவே சீனா சென்று பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
