யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதாக 11 கட்சிகளும், 27 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தினை செலுத்தி இருந்த நிலையில் இன்றைய தினம் பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்தனர்.
வேட்பு மனு கையளிக்கும் காலம் இன்றைய தினம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் யாழ்ப்பாணதில் , இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும், வைத்தியர் அருச்சுனா இராமநாதன், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், செல்வேந்திரா உள்ளிட்டவர்களின் 27 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்தனர்.