முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற மனிதநேய கன்னிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அருண கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் T.B.சரத் அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் ஆரியரத்ண உள்ளிட்டவர்கள் மனிதநேய கன்னிவெடி அகற்றும் பணியில் ஈடுபடுகின்ற நிறுவனத்தின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இன்று(24) காலை மாங்குளம் முல்லை வீதியில் இடம்பெறுகின்ற டாஸ் (DASH) மனிதநேய கன்னிவெடியகற்றும் பணிகள் இடம்பெறுகின்ற பகுதிக்கு விஜயம் செய்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ,பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் மனிதநேய கன்னிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்கின்ற டாஸ் (DASH) தி கலோரஸ்ட் (the halo trust) மக் (Mag) இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக அவர்களது விடயங்களை கேட்டு அறியும் முகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.