முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி மாட்டிறைச்சியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் சட்டவிரோதமாக மாடு ஒன்று வெட்டப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் மற்றும் வள்ளிபுனம் பகுதி சுகாதார பரிசோதகர் றொஜிசன் மற்றும் விசுவமடு பகுதி சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் ஆகியோர் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட இறைச்சிகளை கைப்பற்றி மண்ணெண்ணை ஊற்றி தாட்டு அழித்த அதேவேளை மூவரை கைதுசெய்தனர்
குறித்த மாடு களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதோடு மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த வள்ளிபுனம் தேவிபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட மாடுகள் களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


