கொஸ்கம பகுதியில் உள்ள புஸ்ஸல்லாவ இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கொஸ்கம காவல்துறையினரால் குறித்த பெண்னின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
.உயிரிழந்த பெண் 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் இறப்பர் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாகவும், இன்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.