Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தையிட்டி விகாரைக்குள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டுமானம்

டிசம்பர் 30, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராடும் எம்மிடம் விகாரை கட்டும் போது எங்கே போனீர்கள் ? என கேட்பவர்களால் , விகாரை கட்டி முடிந்த பின் மேலும் இருந்த காணிகளுக்குள் புதிய கட்டுமானங்களை எம் போராட்டங்களை மீறியும் கட்டும் போது அதனை தடுக்க முடியவில்லை என்பதனை உணர வேண்டும் என விகாரைக்காக காணி இழந்த காணி உரிமையாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்

மேலும் தெரிவிக்கையில்,

எமது காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி , சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு எதிராக நாங்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றன போதிலும் , எமக்கான தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த விகாரைக்குள் புதிய கட்டுமானம் செய்யப்பட்டு , புதிய புத்தர் சிலை ஒன்றினை எதிர்வரும் 03 ஆம் திகதி நிறுவ உள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் விகாரை முன்பாக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு ஆதரவு தெரிவித்து , அனைத்து தரப்பினரும் எம்முடன் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என கோருகிறோம்.

எங்கள் 18 பேருடைய தனியார் காணிகளை அடாத்தாக அபகரித்தே சட்டவிரோதமான முறையில் விகாரை கட்டப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயமாக இந்த பகுதிகள் இருந்த போதே , விகாரை கட்டப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாக ஓவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நாம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

எமது போராட்டத்திற்கு மதிப்பளிக்காது விகாரையை சுற்றியுள்ள காணிகளிலும் தொடர்ந்து சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று தையிட்டி மக்களின் காணிகளில் எப்படி விகாரை அமைக்கப்பட்டதோ அவ்வாறே நாளை உங்களுடைய காணிகளிலும் விகாரை அமைக்கப்படும் கேட்டால் இது பௌத்த சிங்கள நாடு என கூறுவார்கள்.

தற்போது வவுனியாவில் புதிதாக புத்தர் சிலை முளைக்கிறது அதேபோல் உங்கள் வீடுகளின் பின்புறமும் புத்த விகாரைகளை அமைப்பார்கள் நாங்கள் கேள்வி கேட்க முடியாதவர்களாக தொடர்ந்து ஆளாக்கப்படுவோம்.

நாங்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்களோ சிங்கள மக்களுக்கு எதிரானவர்களோ அல்ல திட்டமிட்ட ஆக்கிரமிப்பு பௌத்தத்திற்கு எதிரானவர்கள்.

அண்மையில் நயினாதீவு நாக விகாரதிபதியை சந்தித்தபோது அவரே கூறுகிறார் தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக தனியார் காணிகளில் கட்டப்பட்டுள்ளதோடு புத்த பெருமான் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து தனக்கு விகாரை கட்டுமாறு இந்த இடத்திலும் வலியுறுத்தியது கிடையாது என்றார்.

இந்த விகாரைப் பிரச்சனை தொடர்பில் தன்னை எவரும் அணுகவில்லை அணுகியிருந்தால் தையிட்டியில் விகாரைக்குரிய காணி திஸ்ஸ விகாரை சங்கத்தினருக்கு சொந்தமில்லை என்பதை உறுதி ஆதாரத்துடன் கூறியிருப்பேன் என்றார்.

நயினாதீவு விகாராதிபதி எமது நியாயமான போராட்டத்தை ஆதரித்துள்ள நிலையில் எங்களில் சிலர் கேட்கிறார்கள் விகாரை காட்டும் வரை எங்கிருந்தீர்கள் என.

தற்போது மீண்டும் ஒரு புத்தர் சிலையை வைப்பதற்காக வருகிறார்கள் இப்பவும் நாங்கள் கேலிப் பேச்சுகளும் கட்சிகளை வசை பாடுவதையும் விடுத்து எமது இனத்தைக் காக்க ஒன்றினைந்து எதிர்ப்பினை வெளியிட வருமாறு அனைவரையும் அழைக்கிறோம் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி யாழில். சங்கிலி அறுத்த குற்றத்தில் நால்வர் கைது
அடுத்த செய்தி நடிகை வரலக்ஷ்மி இயக்கும் சரஸ்வதி திரைப்படம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று!

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை – பிரதான சந்தேகநபர் கைது

ஏப்ரல் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிசுவை கைவிட்ட பெற்றோருக்கு விளக்கமறியல்

அக்டோபர் 2, 2025
இலங்கை

யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?