Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வெற்றிகரமான ஒரு விளையாட்டு சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கம் – வவுனியா மாநகர முதல்வர்

செப்டம்பர் 5, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஏனைய மாவட்டத்தின் சிறந்த வீரர்கள் உள்வாங்கப்படுகின்ற போது எங்களுடைய மாவட்டத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள் என்ற நோக்கத்துடனேயே மேயர்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வெளி மாவட்ட வீரர்கள் உள்வாங்கப்படுவதாக வவுனியா மாநகர முதல்வர் தெரிவித்தார்.

வவுனியாவில் மேயர் கிண்ண உதைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட வீரர்கள் பலரை புறந்தள்ளி வெளிமாவட்ட வீரர்கள் சிலரையும் உள்வாங்குவதாக தெரிவிக்கப்படும் விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் வெற்றிகரமான ஒரு விளையாட்டு சமூகத்தை எங்களுடைய மாவட்டத்தில் உருவாக்குவதற்காக இதுவரை பிரிந்திருந்த இரண்டு உதைப்பந்தாட்ட சங்கங்களை ஒன்றாக்குவதற்காக ஒரே பாதையில் பயணிப்பதற்காகவே இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளோம்.

தற்போது இரண்டு சங்கங்களும் ஒன்றாகி எட்டு கழகங்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம். இதன்போது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் அணிகளில் பங்கேற்பதற்கு நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்றோம்.

அது ஏனெனில் மன்னார், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் உள்ள மிகத் திறமையான வீரர்களோடு எங்களது மாவட்ட வீரர்களும் விளையாடுகின்ற போது அவர்களுக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் தொடர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான உந்துதலாக இருக்கும்.

இனிவரும் காலங்களில் அதே போன்று எமது வீரர்களை உருவாக்கும் வகையில் எங்களுடைய கழகங்களும் செயல் பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மூவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகின்றது. வட மாகாணத்தில் இருந்து சிறந்த வீரர்கள் உள்வாங்கப்படுகின்ற போது எங்களுடைய மாவட்டத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள் என்ற நோக்கத்தோடு மாத்திரமே இதனை ஏற்பாடு செய்துள்ளோமே தவிர இதில் நாங்கள் எந்த கழகங்களையும் ஒதுக்கவில்லை.

நாங்கள் கூகுள் விண்ணப்ப படிவத்தின் ஊடாகவே விண்ணப்பங்களை பெற்று இருக்கின்றோம். அதில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து எட்டு கழகங்களும் சுமார் 20 வீரர்கள் வீதம் எடுத்திருக்கின்றார்கள்.

40 வீரர்கள் வரையில் அதில் எடுபடாத நிலமை உள்ளது. ஆகவே தொடர்ச்சியாக நாங்கள் இவ்வாறான விளையாட்டுகளை நடத்துவதற்கு தீர்மானித்து இருப்பதன் பிரகாரம் அடுத்த டிசம்பருக்குள் நாங்கள் கழகங்களுக்கிடையில் போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். இந்தப் போட்டியை அடிப்படையாக வைத்து நாங்கள் அடுத்த போட்டிக்கு நகர்வுகளும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி தேர்தலில் தோல்வியுற்ற வடக்கு தெற்கு அரசியல் வாதிகள் தற்போது ஒன்றிணைகின்றனர்- க.இளங்குமரன்
அடுத்த செய்தி தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி அரோனிக்கா ரேச்சல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு

நவம்பர் 4, 2025
இலங்கை

கட்டைக்காட்டு படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்

பிப்ரவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ஜூலை 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?