கனடாவுக்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிர்காலத்தில் கனடா நன்றி தெரிவிக்கும் என்று கியூபெக்கின் முன்னாள் முதல்வர் ஜீன் சாரெஸ்ட் கூறியுள்ளார்.
கியூபெக் நகரில் வணிகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் கனடாவை அதன் “மந்தமான” நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளதுடன், அதன் தலைவர்களைப் பொருளாதாரம் குறித்து மறுபரிசீலனை செய்யவும் தூண்டுகிறது என்று தெரிவித்தார்.
ஜீன் சாரெஸ்ட் தற்போது பிரதமர் மார்க் கார்னியின் கனடா-அமெரிக்க உறவுகள் தொடர்பான குழுவில் உறுப்பினராக உள்ளார்.
டிரம்ப்பின் வரிக் கொள்கைகள் காரணமாக கனடா தனது வரி அமைப்பு, பொருளாதாரம் மற்றும் முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தும் விதத்தை, மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
