தலிபான் ஆட்சியிலிருந்து தப்பித்து உயிருக்கு அஞ்சி மறைந்து வாழும் தனது முன்னாள் ஆப்கான் சக ஊழியர்களுக்கு, கனடா அரசு துரோகம் இழைத்துவிட்டதாக கனடா ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் கோரி மூர் (Cory Moore) குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கனடாவுக்கு உதவியவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குடியேற்ற திட்டத்தின் கீழ், கனடாவில் குடியேறுவதற்காக அவர்கள் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், கனடா அரசு அவர்களை புறக்கணித்துவிட்டதாக ஓய்வுபெற்ற மேஜர் கோரி மூர் (Cory Moore) கூறுகிறார்.
மேலும் தனிப்பட்ட வழக்கொன்றில், கனடா குடியேற்றத்துறை, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC) மற்றும் உலக விவகாரங்களுக்கான துறை (Global Affairs Canada) ஆகியவற்றின் “அலட்சியமான செயல்பாடு” குறித்து, நீதிமன்ற நீதிபதி ஒருவர் தமது தீர்ப்பில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு, தனக்கு உதவியவர்களுக்கு, பிரதி உபகாரம் செய்வதற்கு, கனடா அரசாங்கம் தவறிவிட்டதை, வெளிப்படுத்துகிறது.
கனடா அரசு தனது குடியேற்றக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதுவரை புறக்கணிக்கப்பட்ட ஆப்கானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற மேஜர் மூர் வலியுறுத்தியுள்ளார்.
