ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய பிரதமர் மோடி, இன்று சீனா சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை சீனாவுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியான்ஜெனில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்கவுள்ளதோடு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் 2019ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
