இன்றய தினம் பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 மணியளவில் ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பகருதபருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் தொடர்ந்தது
இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கிய போதும் தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் பங்களிப்பு செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக பருத்தித்துறை தபால் அலுவலகம் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் மற்றும் பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச வீட்டில் பல காலமாக இருக்கும் இராணுவத்தினை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் மற்றும் நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதி மன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இதற்கு முழுமையான காரணமாக இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் பல கருத்துக்களை உள்ளடக்கிய மயணர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கொடுக்கப்பட்டது.
இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சி வேந்தன் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்அவர்களும் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
