கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதியில் ஹெலிகொப்டா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோகோ இலை பயிா்களை அழிக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொலம்பியாவின் காலி நகரத்திலுள்ள இராணுவ விமானப் பயிற்சிக்கருகே வெடிபொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாகனமொன்று வெடித்ததில் ஐந்து போ் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களை மேற்க்கொண்டது கொலம்பிய புரட்சிப்படை ஆயுதக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.


