Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். “நீதியின் ஓலம்” போராட்டம் ஆரம்பம்

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த நீதியின் ஓலம்” எனும், கையொப்பப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையொப்பப் போராட்டத்தின் ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்றனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை நியமித்த டிரம்ப்
அடுத்த செய்தி தாக்குதலுக்கு கொலம்பிய புரட்சிப்படையே காரணம் – ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

மார்ச் 31, 2026
இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவர் சடலம் மீட்பு!

பிப்ரவரி 21, 2025
இலங்கை

பிரதமர் தலைமையில் பெண் சாரணியர் விருது வழங்கும் விழா இன்று!

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது!

செப்டம்பர் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?