Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

மார்ச் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மண்டைதீவு புதைகுழி வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன், அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார், ஊர்காவத்துறை, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் பொது பொலிஸார் சில சமர்ப்பனங்கள் செய்த நிலையில் மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்ட மன்று வழக்கினை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், ஆகியோருடன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

முந்தைய செய்தி வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற தேசிய நேர்மை வாரம்
அடுத்த செய்தி திருகோணமலையில் யானை தந்தங்களுடன் இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கண்டவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் – மன்னார் நகரசபை புதிய செயலாளர்

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகரில் பிரதான போதை வியாபாரி உட்பட மூவர் கைது

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இலங்கை வங்கி ஊழியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு!

மே 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய யாழ்.மாவட்ட கட்டளை தளபதி

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?