ஒன்டாரியோவில் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரைத் தாக்கி ஆபத்தான காயங்களை ஏற்படுத்திய வீட்டு உரிமையாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், “இந்த வழக்குப்பதிவு நமது சட்ட அமைப்பில் ஏதோ குறைபாடு இருப்பதைக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
ஆனால், குற்றவியல் வழக்கறிஞரான டோனியா கென்ட், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை தாம் அறிந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடா சட்டத்தின்படி, தனிநபர்களுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்றபோதும், அந்த உரிமைகள் வரம்பற்றவை அல்ல என்று, கவாதா ஏரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி கிர்க் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால், அதிக விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
