அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இந்தப் போட்டியில், முன்னணி வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னரை எதிர்கொண்ட அல்காரஸ், முதல் செட்டில் 5-0 என முன்னிலை வகித்தார்.
அப்போது, சின்னர் உடல்நலக்குறைவால் போட்டியில் இருந்து விலகியதையடுத்து, அல்காரஸ் சம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

