கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று 5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய பொதியுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயிலிருந்து குறித்த சிகரெட்டுகளை வாங்கியவர்கள் குவைத் விமானத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த 33, 45 வயதான தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களும் கடத்தப்பட்ட சிகரெட்டுகளும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
