விவசாயத் துறையில் இளைய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு நிதி வசதிகள் இன்மையால் ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்ய, 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தொழில்முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்ய கைத்தொழில் துறைகளில் தொழில்முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது..
இந்த சலுகைக் கடன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும், ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 5 மில்லியன் ரூபாய் வழங்கப்படும், ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் 50,000 விவசாய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டம் தரிசு நிலங்களின் அதிகரிப்பைத் தடுத்து, உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவும்
