ஒடிசாவில் சுமார் 10 முதல் 20 மெற்றிக்தொன்வரை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தங்கம் ஒடிசாவின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘இந்தியாவின் தங்க நகரம்’ என்று அழைக்கப்படும் கோலார் மாவட்டத்தின் சாதனையை ஒடிசா முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புடன், ஒடிசா இந்தியாவின் புதிய தங்கச் சுரங்க மையமாக மாறும் என்று அந்த நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தங்கச் சுரங்கங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளை ஒடிசாவின் சுரங்க அமைச்சர் பிபூதி பூஷண் சட்டமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு இது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் அரசாங்கத்தால் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், புவியியல் ஆய்வின் தகவல்களின் அடிப்படையில் தொடர்புடைய தங்கச் சுரங்கங்களில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.
