மொன்றியல் – செயிண்ட்-லோரண்ட் பகுதியில் உள்ள பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு மொன்றியலில் பதிவான 26-வது கொலைச் சம்பவம் இதுவாகும்.
மூன்று பேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பலத்த காயங்களுடன் இருந்த மூன்று இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் 22 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
