Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவர் பாப் சிம்ப்சன் உயிரிழந்தார்!

ஆகஸ்ட் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவரும், பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன், தனது 89 ஆவது வயதில் காலமானார்.

1987 இல் அவுஸ்திரேலியா தனது முதல் உலகக் கிண்ணத்தை வென்றபோது, அதன் பின்னணியில் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் இவரே.

1957 முதல் 1978 வரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாப் சிம்ப்சன், 4,869 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதில் 10 சதங்களும் அடங்கும். வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், லெக் ஸ்பின் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்வதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்று கூறும் அளவுக்கு தலைசிறந்த ஃபீல்டராகவும் திகழ்ந்தார்.

1964 இல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த போட்டியில் பாப் சிம்ப்சன் அடித்த 311 ஓட்டங்கள், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சமாக கருதப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணிக்காக முச்சதம் அடித்த வெகு சில வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார் .

1968 இல் ஓய்வு பெற்ற பாப் சிம்ப்சன், கிரிக்கெட்டில் உலகத் தொடர் நெருக்கடி ஏற்பட்டபோது, தனது 41 ஆவது வயதில் மீண்டும் அணிக்கு திரும்பி அணி தலைவராக பொறுப்பேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1986 இல் அவுஸ்திரேலிய அணியின் முதல் முழுநேரப் பயிற்சியாளராக பாப் சிம்ப்சன் பொறுப்பேற்றார்.

அப்போது தடுமாற்றத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணியை, உலகின் சக்திவாய்ந்த அணியாக மாற்றிய பெருமை பாப் சிம்ப்சனையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீரராக, அணி தலைவராக,பயிற்சியாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய பாப் சிம்ப்சனின் மறைவு, கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முந்தைய செய்தி அவுஸ்திரேலியாவில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு!
அடுத்த செய்தி நல்லூரில் வாள் வெட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

கண்டி ஃபெல்கன்ஸ் அணியோடு மோதும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணி.

ஜூலை 15, 2024
விளையாட்டு

இலங்கை அணிக்கு புதிய தலைவர் நியமனம் – அசலாங்க விலகல்!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் அணி வீரரை சந்தித்த நரேந்திர மோடி

மே 30, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது குஜராத் டைட்டன்ஸ்

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?