தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் புதுமுக நடிகர்கள் மற்றும் புதிய இயக்குனர்கள் வந்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போழுது நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.
சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்த ரோபோ சங்கர் பிறகு திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் ராஜா மற்றும் வினோத் இவர்களோடு இணைந்து ரோபோ சங்கர் கதை எழுதி வருகின்றார்.
ரோபோ சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சின்னத்திரை நடிகர்கள் நடிக்கவுள்ளதுடன் இது முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகவுள்ளது.
