Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்!

ஜனவரி 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்திச் செயற்படுமாறும் அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதன்போது இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார். இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கத்தார் நாட்டின் தூதுவராக – ஆர்.எஸ்.கான் அசாத்

ரஷ்ய தூதுவராக – திருமதி எஸ்.கே. குணசேகரகுவைத் தூதுவராக – எல்.பி.ரத்நாயக்க

எகிப்திய தூதுவராக – ஏ.எஸ்.கே.செனவிரத்ன

நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக – டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

முந்தைய செய்தி நெல்லை ஸ்டைலில் சாம்பார் எப்படி செய்வதுன்னு பார்க்கலாம் வாங்க…
அடுத்த செய்தி யாழில் இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் தண்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

ஜூலை 16, 2025
இலங்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி கூறிய மக்கள்

டிசம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆரம்பம்

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?