Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

இந்தியாவின் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை இரத்து!

ஜூலை 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் நிரந்தரமாக இரத்து செய்துள்ளதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கான காரணம்

கேரளா – பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது தாதியான நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவுக்கு குடிப்பெயர்ந்தார்.

அதன்பின்னர், அந்த நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, நடத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால், நிமிஷாவின் நகைகள், மருத்துவமனையின் உரிமம், கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பறித்து, மஹதி அவரைக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

2017 ஆம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது கடவுச்சீட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார்.

மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு கடந்த மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தும் நோக்கத்தில், அவரின் குடும்பத்தின் கோரிக்கைக்கு இணங்க, மத்திய அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டன. எனினும், சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை.

மேலும், ஏமன் சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முந்தைய செய்தி சீனாவில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!
அடுத்த செய்தி நைஜீரியாவில் 35 பணயக் கைதிகள் சுட்டுக்கொலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாசினிமா

டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியா, இலங்கை இடையேயான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் துரோகம் – வைகோ

ஏப்ரல் 6, 2025
இந்தியா

நடிகர் விஜய்க்கு மற்றுமொரு சவால்!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

ஏப்ரல் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?