இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதில் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இன்று மாத்திரம் இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்களை கைது செய்யப்பட்டதையடுத்தே தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
