இந்தோனேசியாவின் லெவொடோபி லகி லகி எரிமலை சுமார் 18 கிலோ மீற்றர் உயரத்திற்கு வெடித்ததால் அப்பகுதி முழுவதும் படலம் மற்றும் புகை பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இந்தோனேசியாவின் புவியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
எரிமலை வெடிப்பின்போது அதன் சரிவுகளில் எரிமலை வாயு மேகங்களை வெளியேற்றியதைப் பதிவு செய்துள்ளது.
உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.ஜூன் 18 அன்று வெடித்த எரிமலை அப்பகுதியில் சுமார் 32,800 அடி உயரத்துக்கு கரும்புகைகள் சூழ்ந்தது. அதிலிருந்து நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் எச்சரிக்கை நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்வதால் அங்கு உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுமார் 8 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்று கூறப்பட்டுள்ளது
