Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு உதவிய இந்திய அரசாங்கம்!

ஜூன் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய அரசின் நிதியுதவியுடன் இன்றைய தினம் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி,

ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்று குறிப்பிட்டார்.

இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன என்றும் குறிப்பிட்டார்.

உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது என்ற உறுதியை துணை தூதரக ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கமளித்தார்.

வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்துறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்து இருக்கும் என்றும் தூதர் உறுதியளித்தார்.

நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நமக்கு நண்பனாக துணை இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டணை!
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அர்ச்சுனா எம்.பி!

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மே 14, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியது இந்தியா

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் கடவுசீட்டு கட்டணங்கள் மார்ச் 31 முதல் 2.7% உயர்வு!

பிப்ரவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?