யாழ்.வடமராட்கி கிழக்கு செம்பியன் பற்று தெற்கு பகுதியில் இன்றைய தினம்(02) அதிகாலையில் 70வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டதாக தெரியவருகின்றது
மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.