கிணற்றில் தவறி விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கஸ்தலாவ, மேகல்லகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தை தாயுடன் வீட்டில் இருந்த போது தாய் உறங்கிய நிலையில் வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.