அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளரை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாவது தடவையாகவும் பிணை மறுக்கப்பட்டதின் பின்னரே மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரம் தொடர்பில் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.