ஸ்பெயினில் நாளை நவம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரங்கள் நிறைவடைந்துள்ளன.
தற்போதைய பிரதமர் Pedro Sánchez தலைமையிலான சோசலிசக் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சித்து வருகிறது.
எனினும், கருத்துக்கணிப்புகளில் வலதுசாரிக் கட்சிகள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
38.6 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வீட்டு வசதிப் பிரச்சினை, குடியேற்றக் கொள்கை, வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கிய பேசுபொருள்களாக உள்ளன.
தேர்தல் முடிவுகள் ஸ்பெயினின் அடுத்தகட்ட அரசியல் திசையைத் தீர்மானிக்கக்கூடும்.
