நாட்டிலுள்ள ஐந்து மாகாணங்களின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
