Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் மக்களுக்கு 2027ஆம் ஆண்டில் புதிய வரிச்சுமை!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மாநகர சபை வெளியிட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, குடியிருப்புச் சொத்துகளுக்கான நகராட்சி வரி சராசரியாக 9.8 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக 515 டொலர்கள் மேலதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மொன்றியல் நோர்த் பகுதியில் 11.5 சதவீதமும், Lachine பகுதியில் 11.3 சதவீதமும் வரி அதிகரிக்கப்படவுள்ளது.

நகரின் பழுதடைந்த வீதிகள், நீர் விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்காக இந்த வரி அதிகரிப்பு அவசியமானது என மொன்றியல் மேயர் Soraya Martinez Ferrada தெரிவித்துள்ளார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் வீதிப் புனரமைப்புக்காக 6 பில்லியன் டொலர்களும், நீர் உட்கட்டமைப்புகளுக்காக 7.1 பில்லியன் டொலர்களும் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வரி தொடர்பான வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாண்ட்ரீல் மக்களுக்கு, இந்தப் புதிய வரி அதிகரிப்பு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வரி உயர்வின் தாக்கம் வீட்டு உரிமையாளர்களுடன் மட்டுப்படாமல், வாடகைதாரர்களையும் மறைமுகமாகப் பாதிக்கக்கூடும் என்பதால் மாண்ட்ரீல் மக்களின் கவனம் தற்போது 2027ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தின் மீது திரும்பியுள்ளது.

முந்தைய செய்தி பிரான்ஸ் மற்றும் கியூபெக் இணைந்து உருவாக்கியுள்ள புதிய சர்வதேச ஆய்வுக்கூடம்!
அடுத்த செய்தி அல்பேர்ட்டாவில் சிறுவர் பாதுகாப்பு விவகாரம் – 69 இளைஞர்கள் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் முன்னாள் செயற்குழுத் தலைவர் மீது விசாரணை!

மே 27, 2025
உலகம்முதன்மை செய்தி

பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி….

பிப்ரவரி 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

தஞ்சம் புகுந்தவர்களிடம் மோசடி செய்த மூவர்

ஜூன் 12, 2025
கியூபெக்

கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஜூலை 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?