Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நான்கு தொழிற்சங்கங்கள்!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியலிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் (McGill University) நான்கு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கல்விசார் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

முதலாவது கூட்டு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்தியே, அவர்கள் தங்கள் பணிகளைப் புறக்கணித்துள்ளனர்.

மெக்கில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புடன் (COFAM) இணைந்துள்ள தொடர் கல்விப் பணியாளர்கள், கல்விப் பீடப் பேராசிரியர்கள், கலைப் பீடப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நூலகக் கல்விப் பணியாளர்கள் ஆகிய நான்கு தொழிற்சங்கங்கள், 86 முதல் 100 சதவீத ஆதரவுடன் இப்பணிநிறுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

குறைந்தபட்ச ஊதிய உயர்வு, ஒப்பந்த அடிப்படையிலான கல்விப் பணியாளர்களுக்கு அதிக வேலைப் பாதுகாப்பு, அலுவலக இடவசதிக்கான உத்தரவாதம், ஆய்வுகளுக்கு உதவும் தொழில்முறை மேம்பாட்டு நிதி மற்றும் கல்விப் பணிகளின் தேவைகளைப் பிரதிபலிக்கும் கொள்வனவு விதிமுறைகள் ஆகியவற்றை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இக்கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 16 மாதங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையிலேயே, மெக்கில் பல்கலைக்கழகத்தின் கல்விசார் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மெக்கில் பல்கலைக்கழகத்தின் முதல்வரும் நிறைவேற்று உப அதிபருமான ஏஞ்சலா கேம்ப்பெல் (Angela Campbell) மாணவர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, நியாயமான மற்றும் நிலையான ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதற்கு நிர்வாகம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜெனீவியேவ் பிரோன்!
அடுத்த செய்தி பிரான்ஸ் மற்றும் கியூபெக் இணைந்து உருவாக்கியுள்ள புதிய சர்வதேச ஆய்வுக்கூடம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

துருக்கியில் உயிரிழந்த மொன்றியல் பெண்ணின் மரணத்திற்கு நச்சு வாயுவே காரணம்: புலனாய்வுத் தகவல்

நவம்பர் 20, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கியூபெக்

நக்கர்தோக் பனிச்சறுக்கு மைய விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

பிப்ரவரி 24, 2026
உலகம்முதன்மை செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி.

ஆகஸ்ட் 22, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?